பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!!

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி ஆவார். இவரது சகோதரி தேவி கடந்த 21-ந் தேதி இரவு ஆண்டாள் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தூண்டுதலின்பேரில், அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் வீட்டில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஆட்கள் அழைத்து செல்வது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் அமர்பிரசாத் ரெட்டி மற்றும் அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்து போட வேண்டும். அப்படி கையெழுத்து போடாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News