நடிகர் விஜய், அரசியல் கட்சித் தொடங்கிய 5 நாட்களிலேயே செயற்குழு கூட்டத்தையும் மிக ரகசியமாக சென்னை பனையூரில் கூட்டி காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது : விமர்சனங்களை இன்முகத்துடன் கடந்து செல்லுங்கள்.
பொது மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இடையூறுகள் மற்றும் விமர்சனங்கள் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் இன்முகத்துடன் கடந்து செல்ல வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பணி தீவிரமடையும் குக்கிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும்.
80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சிப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.