நடிகர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் பெயரில் வெற்றிக் கழகம் என ஒற்று வரும் என சிலர் இலக்கண பிழையை கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழக வெற்றி கழகம்’ இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. ‘வெற்றி கழகம்’ என்பது சரியா? அல்லது ‘வெற்றிக் கழகம்’ என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது. ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம். நான் அறிந்தவரை, அது ‘வெற்றிக் கழகம்’ என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
மொழியில் பிழை என சொல்லும் போதே அதை சரி செய்து மொழியை காக்க திராணி இல்லாதவர், எப்படி அந்த மொழியை பேசும் இனத்தை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. விஜய் இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.