கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால், இது சந்தானத்தின் மற்றொரு ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் வசூல் சரிந்து வருகிறதாம்.
அதாவது, முதல் 5 நாட்களில் 5.5 கோடி ரூபாயை வசூலித்த இப்படம், 6-வது நாளில், வெறும் 50 லட்சம் ரூபாயை மட்டும் குவித்துள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது, இனிவரும் நாட்களில் வசூல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.