புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
பரிசோதித்ததில், அதில் நிறத்திரத்திற்காக புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதாவது, ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை பயன்படுத்தி பஞ்சு மிட்டாய்களை தயாரித்து வந்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற பஞ்சு மிட்டாய்களை 30க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் அதே பகுதியில் விற்று வருவதாகவும் தெரியவந்ததை அடுத்து அவர்களை தேடும் பணியில் உணவு பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது.
பிடிபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் (FSSAI)அனுமதி அளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்களுக்கு தெரிவித்தனர்.