ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்து வருபவர் மணிகண்டன். இவர் நடிப்பில் தற்போது லவ்வர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. பிரபு ராம் இயக்கியுள்ள இப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சினிமாத்துறையை சேர்ந்த ரமேஷ் பாலா என்பவர், லவ்வர் படத்தை பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு பொசசிவ்வான காதலன்.. தனக்கான இடம் வேண்டும் என்று கோரும் காதலி. இவர்கள் இருவரும் தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்கிறார்களா? அல்லது பிரிந்து செல்கிறார்களா என்பது இப்படத்தின் கதை.
முதல் காட்சியில் இருந்தே படத்தின் உள்ளே நம்மை அழைத்து செல்கிறார்கள். சரியான வகையில் இறுதிக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரபு ராம், உண்மைக்கு நெருக்கமான வகையில், இன்றைய இளைஞர்களுக்கான படம் ஒன்றை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு 3.5/5 என்ற ரேட்டிங்கையும் அவர் கொடுத்துள்ளார்.