பெண் இயக்குநருடன் கூட்டணி சேரும் அசோக் செல்வன்..!

சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். இந்த படத்திற்கு பிறகு, தெகிடி, பீட்சா 2 ஆகிய படங்களில் நடித்த இவர், வளர்ந்த வரும் கதாநாயகனாக உருவெடுத்தார்.

இதையடுத்து, ஓ மை கடவுளே, போர் தொழில், ப்ளு ஸ்டார், சபா நாயகன் உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த அசோக் செல்வன், தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பெண் இயக்குநரின் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கண்ட நாள் முதல், கண்ணாம்பூச்சி ஏனடா, அனந்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.பிரியா.

இவர் அடுத்து இன்னொரு படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் தான் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

மேலும், ஜெயிலர் படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த வசந்த் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்திருந்த ஐஸ்வர்ய லக்ஷமி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News