மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும், வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்ததாகவும், தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News