திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு ஊழியர்கள் பயன்படும் வகையில் அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது.திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நேரடி தேர்வின் மூலம் இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் காலை 08:30 மணிக்கு கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் வழியாக இந்த பேருந்து மயிலாடுதுறை செல்கிறது.
இதற்கான தொடக்க விழா இன்று காலை கொரடாச்சேரியில் நடைபெற்ற நிலையில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, தொடர்ச்சியாக பேருந்துக்குள் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து திருவாரூர் வரை பேருந்து ஓட்டி சென்றார். இந்த நிகழ்வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை நாகை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி வரும் நிலையில், பெருமளவு பேருந்துகள் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதில்லை என்கின்ற குறைபாடு இருந்ததை போக்கும் வகையில், இந்த புதிய பேருந்து இயக்கப்படுவதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.