கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்தின் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஜன்னல் கண்ணாடியை தன்பக்கம் திறக்க பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணின் ஜன்னல் கண்ணாடி மூடியுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை கண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, இரண்டு பெண்களையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார். இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.