தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இவரது இந்த முடிவுக்கு, ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் ஒருசேர எழுந்து வருகிறது. இந்நிலையில், கட்சி தொடங்கிய ஒரே வாரத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் திமுகவில் இணைந்துள்ளார்.
அதாவது, த.வெ.க கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பில்லா ஜெகன் என்பவர் பதவி வகித்து வந்தார்.
ஆனால், இவர் தற்போது திமுக-வில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.