மத்திய பட்ஜெட்டில் தென் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை குற்றசாட்டு எழுந்து உள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடாகா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அந்தந்த மாநில முதலமைச்சர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
மேலும், சமீபத்தில் கர்நாடாகா சார்பில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி இருந்தார்கள்.
மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்கள்.
அதேபோல் தமிழ்நாடு சார்பில் எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பி இருந்தார்கள்.
இந்த நிலையில் உங்களுக்குத் தெரியுமா தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றிய அரசு திருப்பித் தரும் வரி பகிர்வு வெறும் 26 பைசா என்ற வாசகங்களுடன் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.