ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் நடத்திய அரசு மருத்துவர்..!

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அபிஷேக் என்ற மருத்துவர் தனது ப்ரீ-வெட்டிங் ஷூட்டை மருத்துமனையின் ஆபரேஷன் தியேட்டரில் எடுத்துள்ளார்.

அப்போது, ஆபரேஷன் தியேட்டரில் கேமராக்களுடன் நுழைந்தவர்களைக் கண்டதும், நோயாளி பதற்றத்தில் எழ முயன்றுள்ளார். அப்போது அவரை சமாதானம் செய்து, அறுவை சிகிச்சையை தொடரந்து உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவ, பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன.

இதனை அறிந்த கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உடனடியாக அந்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய உத்தவிட்டார். மேலும் “அரசு மருத்துவமனைகள் மக்களின் தேவைக்காகவே உள்ளன.

தனிப்பட்டவர்களின் தேவைக்கு அல்ல. இதில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் அமைச்சர் குண்டுராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News