மீண்டும் அழைப்பாரா செல்வராகவன்? காத்திருக்கும் சோனியா அகர்வால்!

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில், செல்வராகவன் உடன் பணியாற்றியவர் சோனியா அகர்வால்.

அதன்பிறகு, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், சில வருடங்களிலேயே கருத்து ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், புதுப்பேட்டை 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால், நடிப்பீர்களா என்று சோனியா அகர்வாலிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த அவர், “செல்வராகவனின் படங்களில் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இப்போது வரை , எந்தவொரு அழைப்பும் எனக்கு வரவில்லை” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News