மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் சூறாவளியாய் சுழன்றடித்த கோடிக்கணக்கான கொசுக்களால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொரோனா காலத்தில் காணாத ஊரடங்கை தற்போது புனே நகரம் கண்டு வருகிறது. அந்தளவுக்கு கொசு சூறாவளி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. புனேவின் முத்தா ஆற்றின் மீது சுழன்று கொண்டிருக்கும் இந்த கொசு சூறாவளி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
காரடியில் உள்ள முலா-முத்தா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததே இந்த கொசு சூறாவளி க்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. உபரி நீரை அகற்றும் பணியை 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக புனே மாநகராட்சி தெரிவித்த போதிலும், இன்னும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.