அதிகம் படித்தவர்கள் இருக்கும் நாடு எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது, அமெரிக்கா, இங்கிலாந்து என்பதாகும். ஆனால் பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி கல்வி அறிவில் முன்னிலையில் இருக்கிறது.
2022 இல் பின்லாந்து, தென் கொரியா, கனடா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் பெரும்பாலும் முதலிடத்தில் இருந்தன. தற்போது அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் கனடா முதலிடத்தில் இருக்கிறது. கனடாவில் 59.96% படித்தவர்கள் காணப்படுகிறார்கள்.
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அங்கு 52.68% படித்தவர்கள் காணப்படுகிறார்கள்.
மூன்றாம் இடத்தில் லக்சம்பர்க், நான்காம் இடத்தில் தென் கொரியா, ஐந்தாம் இடத்தில் இஸ்ரேல் இருந்து வருகிறது.
கல்வி அறிவு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலின் முதல் 10 இடத்தில் இந்தியா இடம்பெறவில்லை. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.