ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஏமன் நாட்டின் தெற்கே உள்ள லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் அது வெடித்துள்ளது. இதில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர். அருகில் இருந்த 4 பேர் காயமடைந்தனர்.
உள்நாட்டு போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 4.31 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.