காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படத்திற்கு பிறகு, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இரண்டு முறை தேசிய விருது வென்ற இவர், தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரது வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம், 5 சவரன் நகை, கடைசி விவசாயி படத்திற்கு வாங்கிய 2 தேசிய விருதுகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மணிகண்டன் வீட்டின் முகப்பில், ஒரு பையில் திருடிச் சென்ற தேசிய விருதுகள் கிடந்துள்ளது.
மேலும், அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று காகிதம் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. தற்போது, இந்த பையை வைத்தது யார் என்று, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.