கர்நாடகா மாநிலத்தில் தாவண்கெரே தாலுகா மெல்லகேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
‘காந்தியே தனது கழிவறையைச் சுத்தம் செய்து வந்தார். கழிவறையை சுத்தம் செய்தால் தவறில்லை’ என தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.