பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவாண்!

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தலைமையகத்தில் அசோக் சவாணுக்கு பாஜகவின் மூத்த தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவா்ண், இனி பாஜகவுடன் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவேன்.

காங்கிரஸ் கட்சிக்கு நான் நேர்மையாக இருந்தேன். இனி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாநிலங்களவை தேர்தலாக இருந்தாலும் சரி வெற்றி வாய்ப்பு இருக்கும் கட்சியாக பாஜக மாறியுள்ளது. நான் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்ததையடுத்து கட்சிக்கு எதிராகவோ, தவறாகவோ பேச விரும்பவில்லை.

பட்னாவிஸ் எப்போதும் எனது தொகுதிக்கு உதவியாக இருந்துள்ளார். அரசியல் எதிரிகளை மட்டும் குறிவைத்துத் தாக்குவது அரசியல் இல்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். பாஜகவில் இணையச் சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை, இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான் என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News