திறமையான இளம் இயக்குநர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை, நடிகர் தனுஷ் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வாறு வாய்ப்பு பெற்றவர்கள், திரைத்துறையில் தற்போது மிகமுக்கிய இடத்தில் இருந்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, சமீபத்தில் குட் நைட் படத்தை பார்த்த தனுஷ், அந்த படத்தின் இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும், இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றலாமா என்றும் கேட்டுள்ளார். இதற்கு, தற்போது ஒரு கதை எழுதி வருகிறேன்.
அதில் நீங்கள் பொருந்தினால், நிச்சயம் உங்களுடன் இணைவேன் என்று அவர் கூறியுள்ளார்.