டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
250 வார்டுககளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 134 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேட்சை வேபாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை பாஜக நிர்வகித்து வந்த நிலையில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.