தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மேலும் இது அதி தீவிரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணிநேரத்தில் மாண்டோஸ் எனும் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் 9 ஆம் தேதி அல்லது 10 ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று இரவு 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.