விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வெடிமருந்து கலப்பின் போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.