நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான பாஜகவைவும் மத்திய அமைச்சர்களையும் கடுமையாக சாடினார்.
அப்போது அவர் பேசிய போது பாஜகவில் சேருபவர்கள் முதலில் பொண்டாட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணன் தம்பியை பிரிக்கிறார்கள், மகனை பிரிக்கிறார்கள். பயமாக உள்ளது.
அஜித் பவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு கூறி அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் நெருக்கடி கொடுத்தது. அதை தாங்க முடியாமல் பாஜகவில் இணைகிறார். அவருக்கு உடனே அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பாஜக என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வந்துவிடலாம். இப்படி ஒரு மோடி மஸ்தான் வித்தையை கண்டுபிடித்த வித்தைக்காரர் தான் நரேந்திர மோடி எனவும் விமர்சித்தார் ஆ ராசா.