கேரளாவை சேர்ந்தவர் பிரணவ் நாயர்(22). பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கம்ப்யூட்டரில் அதிக ஆர்வம் இருந்தததால் மென்பொருள் பொறியாளராக விரும்பினார்.
அவருக்கு கவுகாத்தியில் உள்ள ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது ஐஐடி இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் பிரணவ் நாயர் வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிக்கு செல்ல உள்ளார் பிரணவ் நாயர். உடல் ரீதியாக பல தடைகள் இருந்தாலும் தனது விடாமுயற்சியால் முன்னேறிய பிரணவ் நாயர் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்.