மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகளால் நிலத்தடி பிரஷர் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ எடையுள்ள வெடிபொருட்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்டன. மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.