ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தங்களுடைய கட்சிகளை பிரபலப்படுத்த வெறுக்கத்தக்க வகையில் காண்டம் பாக்கெட்டுகளை கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரபல அரசியல் கட்சிகள்.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் சட்டமன்றத்திற்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி விட்டன.
இதனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தாங்கள் தொகுதியில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக ஆளும் கட்சி முக்கிய எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சி சின்னம் , லோகோ, கட்சியின் பெயர் ஆகியவற்றுடன் கூடிய காண்டம் பாக்கெட்களை வாக்காளர்களுக்கு ஆங்காங்கே இலவசமாக வழங்கி பிரச்சாரம் செய்வதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தயார் செய்துள்ள தேர்தல் விளம்பர காண்டம் பாக்கெட் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.
சமூக வலைதளங்களில் இந்த காட்சிகளை பார்க்கும் வாக்காளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் கட்சிகள் எதையும் செய்ய துணிந்து விட்டன என்பதற்கு இதுவே சாட்சி என்று கூறுகின்றனர்.