மாட்டு இறைச்சி பேருந்துகளில் எடுத்து செல்லலாம் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்..

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் பாஞ்சாலை. 59 வயதாகும் இவர், மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் ரோட்டோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி அன்று, இந்த முதியவர், மாட்டு இறைச்சியை எடுத்துக் கொண்டு, அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை அறிந்த ஓட்டுநரும், நடத்துநரும், அந்த பெண்ணை நடுவழியிலேயே இறக்கவிட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற பகுதியில் இறக்கிவிடப்பட்ட அந்த பெண், தனியார் பேருந்து மூலம் அங்கிருந்து மீண்டும் ஊருக்குள் வந்துள்ளார். இந்த சம்பவம், போக்குவரத்துத்துறை கவனத்திற்கு சென்றதையடுத்து, மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துனரும், ஓட்டுநரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இதுகுறித்து பேட்டி அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாட்டு இறைச்சியை பேருந்துகளில் எடுத்து செல்லலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News