பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து; கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!

கோவில்பட்டியில் பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் காந்தி மண்டபத்தில் இருந்து தேவர் சிலை நோக்கி கருப்பு கொடியை ஏந்தி பேரணியாக செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை அண்ணா பேருந்து நிலைய நுழைவாயிலின் முன்பு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மினி பேருந்தில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விரோதப் போக்கை கையாளும் பாஜக அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்கு வஞ்சனை செய்யும் பிரதமர் மோடியை கண்டித்தும், காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக சட்டசபை தீர்மானத்தை ஏற்க மறுத்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் தமிழக மக்களின் மீது அக்கரை இல்லாத போக்கினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

RELATED ARTICLES

Recent News