நிதானமாக விளையாடி 90 ரன்கள்.. ஸ்டார் பிளேயராக மாறிய துருவ் ஜுரல்.. வழங்கப்பட்ட தரமான பரிசு..

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில், இந்தியா அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான துருவ் ஜுரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், முதல் இன்னிங்சில் பேட்ஸ்மேன்களின் விக்கெட் மளமளவென சரிந்த நிலையில், நிதானமாக விளையாடி 90 ரன்களை எடுத்து, கடைசியாக தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவரது இந்த ஆட்டத்தின் காரணமாக, இந்திய அணி சரிவில் இருந்து விலகி, வெற்றிக் கனியை பறித்தது. இதுமட்டுமில்லாது, 3-1 என்ற கணக்கில், தொடரையும் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த துருவ் ஜுரலின் ஆட்டத்தை பாராட்டி, தரமான பரிசு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி, 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெக்டர் என்ற காரை, துருவ் ஜுரலுக்கு பரிசாக வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News