விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி தயாராகி வரும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
இப்படம், வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தும், ஜி.வி.பிரகாஷ்-ம், வேறு ப்ராஜெக்டில் மீண்டும் இணைந்துள்ளனர்.
அதாவது, பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தை, ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அகிரன் தான் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.