நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் நேருவின் மகன் பெயரில் 32 விருப்பமனு தாக்கல்!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழலில், தி.மு.க தலைமை ஏற்கெனவே அறிவித்தபடி, தி.மு.க வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்ப மனு படிவங்கள் கடந்த பிப்.19-ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்றனர்.

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் ரூ.50 ஆயிரம் கட்டணத்தை செலுத்தி விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் பூர்த்தி செய்ய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தி.மு.க தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

மேலும், அருண் நேரு பெயரில் மட்டும் மொத்தம் 32 விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News