சென்னை அருகே பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ளது காவல்ச்சேரி ஊராட்சி இதில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளது.
இந்த ஊராட்சி சென்னை வளர்ச்சி குழும எல்லையில் இருந்தும் பூங்கா இல்லாமல் சிறுவர்கள் விளையாடவும், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் முடியாமல் இருந்து வந்தது.
இதனால் ஊராட்சியில் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பூங்கா அமைக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ஒன்றிய வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் காவல்ச்சேரி பெண் வார்டு உறுப்பினர் சுசிலா சுரேஷ்பாபு தனது சொந்த செலவில் பூங்கா அமைத்துள்ளார்.
இதில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்கள் விளையாட டென்னீஸ், ஷெட்டில், வாலிபால் கோட் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைகப்பட்டுள்ளது.