நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மேல இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரி நாடார். உடம்பு முழுக்க கிலோ கணக்கில் நகைகள் அணிந்து நடமாடும் நகைக்கடை போல் வலம் வருவார். கடந்த 2011 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்றார் ஹரி நாடார்.
இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு பண மோடி புகாரில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு ஜாமீன் மூலம் வெளியே வந்த ஹரி நாடார் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.
கழுத்தில் நகைகள் எதுவும் இல்லாமல் வெறும் கருங்காலி மாலையை மட்டும் அணிந்தபடி நெற்றியில் திருநீருடன் பேசியுள்ளார் ஹிரி நாடார். 2 ஆண்டுகள் 10 மாதம் கால சிறை வாழ்க்கை நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரண மோசடி வழக்குக்கு 30 நாள் 60 நாட்களில் பெயில் கொடுக்கக்கூடிய நீதிமன்றங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 2 ஆண்டுகள் 10 மாதம் காலம் கழித்து தனக்கு பிணை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
றையில் இருந்த காலத்தில் துரோகிகள் யார், நண்பர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடிந்தது என்றும் ஹரி நாடார் கூறினார்.