பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் இத்தனை கோடி நஷ்டமா…அதிர்ச்சியில் மார்க் ஜுக்கர்பர்க்

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் நேற்று உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.

இதனால் அதன் பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது. மேலும் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News