ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் நடித்து வரும் இவர், துபாயில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு, பிரபல அரசியல்வாதி, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்கிக் கொடுத்ததாக, தகவல் ஒன்று பரவி வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா பெத்துராஜ், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஒரு தகவலை பரப்புவதற்கு முன் அதன் உண்மை நிலையை அறிந்து, அந்த தகவலை பரப்புங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும், தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.