வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திர குமார், “பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை தெங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயு சந்தித்து பேசினார்.