Connect with us

Raj News Tamil

குஜராத் சட்டபேரவை தேர்தல் : 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி..!

today news tamil

இந்தியா

குஜராத் சட்டபேரவை தேர்தல் : 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி..!

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

today news tamil

வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 153 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது. பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top