துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட போது தான் அவருக்கு காதுக்கு கீழ் நரம்பில் சின்ன புடைப்பு போல் இருப்பது கண்டறியப்பட்டு, இதற்காக மைனர் சர்ஜரி ஒன்றும் நடந்தது.
இந்நிலையில் அஜித் பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். அஜித்துக்கு கண்களிலும் பிரச்சனை உள்ளதாகவும், அதற்காக அவர் டிரீட்மென்ட் எடுத்து வருவது தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
ஒருமுறை அஜித்தை சந்திக்க அவரின் அலுவலகம் சென்ற போது, ஒரு நாளைக்கு ஒரு கை அளவு மாத்திரைகளை எடுத்து வருவதாக அஜித் தன்னிடம் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.