நாடாளுமன்ற தேர்தல் நெருக்கிய வரும் நிலையில், நிகழாண்டில் ஐந்தாவது முறையாக தமிழகத்துக்கு இன்று வருகை தருகிறார். டெல்லியில் இருந்து தனி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேடிற்கு காலை 11 மணிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன், ஜான்பாண்டியன், தனது கட்சியை அண்மையில் பாஜகவுடன் இணைத்த சரத்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.