நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தேதியை நாளை (மார்ச்.16) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.