சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

தேர்தலின் போது நடைபெறும் தில்லுமுல்லுகள், முறைகேடுகள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பணியாற்றும் அதிகாரிகள், கண்காணிக்கும் அதிகாரிகள் 360 டிகிரி கேமரா பொருத்திய காரில் பணியை துவக்கி உள்ளனர். Wifi மூலம் கண்காணிப்பு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

முதல் நாளான இன்று சேப்பாக்கம் மற்றும் சென்னை காமராஜர் சாலையில் மூன்று பறக்கும் படை வாகனங்களும், ஒரு நிலையான கண்காணிப்பு அதிகாரி மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனைகள் நடைபெற்றது.

கார் மற்றும் ஆட்டோக்களில் வருபவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஷிப்ட் வாரியாக தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று நள்ளிரவே சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 10 லட்சத்து ஐம்பதாயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News