இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசன் நடந்தது. நேற்று டெல்லியில் நடந்த பைனலில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஷஃபாலி வர்மா 27 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார், லேனிங் 23 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெல்லி அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது.
இதனால் 18.3 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி அணி 113 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 39 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி டெவின்(Sophie Devine) 27 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
பொறுப்புடன் விளையாடிய எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 115 ரன்களை எடுத்தது.
அத்துடன் 2024ம் ஆண்டுக்கான இந்தியன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.