ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் மாநகரப் பேருந்து சோதனை செய்தனர்.
பின்புறம் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் கண்டு மாநகரப் பேருந்தில் இருந்து அவர்கள் வைத்திருந்த பையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை போலீசார் கைப்பையை சோதனை செய்தபோது அதில் 15,000 நைட்ரோ விட் எனும் போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முள் புதரில் பதுங்கி இருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கி பிடித்த நிலையில் ஒருவன் மட்டும் தப்பிச் சென்றுவிட்டார்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முகப்பேர் பகுதியை சேர்ந்த சட்ட கல்லுரி மாணவர் தினேஷ் (24) மற்றும் வயது கலையரசன் (17) சிறுவன் உள்ளிட்ட இருவர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் ஹைதராபாத் மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை மொத்த விலையில் வாங்கி, சென்னை சுற்று வட்டார பகுதிகளில் விநியோகம் செய்வது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் விலை கல்ல சந்தையில் சுமார் 20 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் தொடர்ந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் போதை மாத்திரை கடத்தி வந்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.