மௌனம் பேசியதே படத்தின் மூலம், முக்கிய வேடத்தில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
அதன்பிறகு, பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், இன்றுவரை கதாநாயகி அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் பாடலுக்கு, துளி கூட மேக்கப் இல்லாமல், ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.