பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், இரு கட்சிகளின் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்தது.

இதையடுத்து இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

இதைதொடர்ந்து, அண்ணாமலையும், அன்புமணி ராமதாஸும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News