விஜயின் படத்தை இயக்க வேண்டும் என்று, பல இயக்குநர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால், ஒருசிலருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள், மிகப்பெரிய உச்சத்திற்கு செல்கின்றனர். ஆனால், வாய்ப்பை, சரியாக பயன்படுத்தாத நபர்கள், அதள பாதாளத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.
அந்த வகையில், விஜயின் வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி, அந்த படத்திற்கு பிறகு, இதுவரை வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.
வாரிசு படத்தின் மோசமான விமர்சனங்கள் தான், இவரது இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.