பெட்ரோல் விலை ரூ.75, சிலிண்டர் விலை ரூ 500 : திமுக வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்..!!

மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக இன்று வெளியிட்டுள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். பெட்ரோல் ரூபாய் 75 க்கும் – டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News