விஜயகாந்த் மகனுடன் இணையும் ப்ளாக் பஸ்டர் இயக்குநர்!

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன்.

இந்த படத்திற்கு பிறகு, ஒருசில படங்களில் நடித்த இவர், தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சண்முகப் பாண்டியன் பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பொன்ராம்.

இவர் தற்போது, சண்முக பாண்டியனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News